வெயிட் அண்ட் சீ.. நாளை மறுநாள் எங்களுக்கு எத்தனை மாவட்ட செயலாளர் ஆதரவு பாருங்க.. டுவிஸ்ட் வைத்து OPS குரூப்.!

நாளை மறுநாள் எத்தனை மாவட்ட செயலாளர்கள் எங்களுக்கு ஆதரவாக வருவார் என்று பாருங்கள். ஒற்றை தலைமையை ஏற்படுத்த சர்வாதிகார முயற்சி நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. 

Do so many district secretaries support the OPS?  Vaithilingam information

எடப்பாடி பழனிசாமி தரப்பு சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார் அதில், ஒற்றை தலைமை விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும், தொண்டர்கள் குழப்பத்துக்கு ஆளாவார்கள் எனவும், பொதுக்குழுவை மீண்டும் எப்போது நடத்துவது என்பது பற்றி இணைந்து முடிவெடுக்கலாம் எனவும் அக்கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், மரபுப்படி சிறப்பு அழைப்பாளர்களை பொதுக்குழுவுக்கு அழைக்கவில்லை. பொதுக்குழு நிகழ்ச்சி நிரல் எதுவும் இதுவரை அனுப்பவில்லை எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் முன் படித்துக்காட்டினார்கள்.

Do so many district secretaries support the OPS?  Vaithilingam information

இந்த கடிதத்தை படித்து காட்டிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியலிங்கம்;- அதிமுகவில் கீழ்மட்ட தொண்டர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். எங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. அவர்களின் வேண்டுகோளை ஏற்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை தள்ளுவைக்க கோரிக்கை வைத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஓபிஎஸ்சுக்கு 11 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுபற்றி கருத்து தெரிவித்த வைத்திலிங்கம், ஓபிஎஸ்சுக்கு சுமார் 30 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாகவும், 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Do so many district secretaries support the OPS?  Vaithilingam information

நாளை மறுநாள் எத்தனை மாவட்ட செயலாளர்கள் எங்களுக்கு ஆதரவாக வருவார் என்று பாருங்கள். ஒற்றை தலைமையை ஏற்படுத்த சர்வாதிகார முயற்சி நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. அதிமுகவில் பிளவு ஏற்பட கூடாது என்று கட்சியில் பிரச்சினை நடக்க கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் இருவரிடையே சரியான தகவலை தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios