ops may vote me said dinakaran
ஓபிஎஸ் எனக்காக ஓட்டு வேண்டுமானால் போட்டிருப்பார். ஆனால் ஓட்டு கேட்டேன் என்பதெல்லாம் பொய் என தினகரன் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அசந்த நேரத்தில் ஆர்.கே.நகரில் நான் வெற்றி பெற்றதாக ஆட்சியாளர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான். நான் ஜெயித்தபோது தியானம் செய்யப் போய்விட்டார்களா? என தினகரன் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எனக்காக ஆரம்பகாலத்தில் ஓபிஎஸ் பிரசாரம் செய்ததாக கூறியிருக்கிறார். அதெல்லாம் பொய். அவர் எனக்காக ஓட்டு வேண்டுமானால் போட்டிருக்கலாம் என தினகரன் தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டை முன்னிட்டு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் என கேட்டதற்கு, இந்த அமைச்சர்களுக்கு பதில் சொல்லக்கூடாது என முடிவெடுத்திருப்பதாக கூறிய தினகரன், அவர்களின் கருத்து தொடர்பாக இனிமேல் தன்னிடம் கருத்து கேட்க வேண்டாம் எனவும் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
