திமுகவின்  B டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியை முடக்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஓ. பன்னீர் செல்வத்தை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். 

திமுகவின் B டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியை முடக்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஓ. பன்னீர் செல்வத்தை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். நமது அம்மா நாளிதழில் செய்தி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய மருது அழகுராஜ் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில் ஜெயகுமார் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். ஆனால் அப்பொதுக் குழு கூட்டத்தை தடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் பகிரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்க்கு அழைப்பு..? அழைப்பிதழ் அனுப்பி ஷாக் கொடுத்த இபிஎஸ்

இதையும் படியுங்கள்:  அடி தூள்.. அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி.. வெளியானது தீர்மானம்.. அலறும் ஓபிஎஸ்.

இதே நேரத்தில் நமது அம்மா நாளிதழில் இருந்து விலகிய அதன் செய்தியாசிரியர் மருது அழகுராஜ் தொடர்ந்து எடப்பாடிபழனிசாமி தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று விளக்கமளிக்க சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்திகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நமது அம்மா நாளிதழில் நிதி கையாண்ட விவகாரத்தில் தான் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

பல கட்சிகளுக்கு சென்ற மருது அழகுராஜ் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பேர்வழி என விமர்சித்தார். நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அடையாள அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படவில்லை என கூறிய அவர், சட்ட விதிகளின்படி தான் பொதுக் குழு நடந்தது என்றார். மருது அழகுராஜ் பொதுக்குழு குறித்து பேசியது தொண்டர்களை கோபப்படுத்தி உள்ளது, எங்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது, எனவே விரைவில் அதற்கான தீர்ப்பு வரும் என்றார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அப்படி தொடர் குற்றங்களை செய்தவர்களை ஜாமினில் எடுத்தது திமுகதான் என்ன ஜெயக்குமார் விமர்சித்தார். எங்கள் மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கு பயமில்லை, எந்த வழக்கை பார்த்தும் அதிமுக பயப்படாது என்றார். ஓபிஎஸ் காட்சியை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார், அவரை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் கூறினார், ஆனால் இப்போது டிடிவி தினகரனை இரகசியமாக சந்திக்கிறார். அவரது மகன் திமுகவிற்கு ஆதரவாக பேசுகிறார்,

இவற்றையெல்லாம் அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை, மொத்தத்தில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் B டீமாக செயல்பட்டு வருகிறார். இனி ஒருபோதும் ஓபிஎஸ்சை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், திட்டமிட்டபடி வரும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். சசிகலா தினகரன் கட்சிக்கு ஒருபோதும் திரும்ப முடியாது, சசிகலாவின் வேன் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சொல்வது வேஸ்ட் ஆப் டைம்... வேஸ்ட் ஆப் மனி... வேஸ்ட் ஆப் எனர்ஜி என ஜெயக்குமார் நக்கல் அடித்தார்.