Asianet News TamilAsianet News Tamil

’பரிதாபத்தில் ஓ.பி.எஸ்...’ திமுகவில் இணைந்த முக்கியப்புள்ளி..!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் செயலாளர் அன்வர் ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்க முயற்சித்துள்ளார்

OPS in pity JM Basheer joining DMK
Author
Tamil Nadu, First Published Nov 25, 2021, 12:08 PM IST

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருப்பதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜே.எம்.பஷீர் விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜே.எம்.பஷீர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.OPS in pity JM Basheer joining DMK

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நீடிக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் செயலாளர் அன்வர் ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்க முயற்சித்துள்ளார்’’ எனத் தெரிவித்தார். 

அதிமுக தேர்தல் தோல்விக்கு காரணமாக எடப்பாடி பழனிச்சாமியை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பேட்டி அளித்தார். இதையடுத்து பஷீர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட பஷீரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டனர். OPS in pity JM Basheer joining DMK

இந்த நிலையில் பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சென்றுவிட்டு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியினர் சந்தித்தனர். அப்போது அவரை சந்தித்த பஷீர், அவருக்கு வணக்கம் வைத்தார். ஓபிஎஸ்ஸும் வணக்கம் வைத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பஷீருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என அறிக்கையில் கையெழுத்திட்ட ஓபிஎஸ்- பஷீர் சந்திப்பு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.OPS in pity JM Basheer joining DMK

ஆனால் இந்த வீடியோவில் பஷீருக்கு பதில் வணக்கம் வைக்கும் ஓபிஎஸ், அவரிடம் எதுவும் பேசாமல் கையை காட்டி வழிவிடுமாறு சொன்னார். உடனே பஷீரின் முகம் மாறியது. எனவே பஷீரை தவிர்க்க முடியாததால் ஓபிஎஸ் வணக்கம் வைத்துவிட்டு பின்னர் சர்ச்சை ஏற்படக் கூடாது என்பதாலும் அவர் மேற்கொண்டு தம்மிடம் பேசி விடக் கூடாது என்பதாலும் வழிவிடுமாறு ஓபிஎஸ் கூறி இருக்கிறார். 

இதனை தொடர்ந்து இன்று பஷீர் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios