Asianet News TamilAsianet News Tamil

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா..! ஒன்றரை ஆண்டில் மக்களை துன்பத்தில் ஆழ்த்திய திமுக- ஓபிஎஸ் ஆவேசம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும், இல்லையென்றால் மக்கள்படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

OPS has urged the DMK government to roll back the increase in prices of products like ghee and butter in Aavin company
Author
First Published Dec 18, 2022, 9:20 AM IST

வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக

ஏழையெளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆவின் நெய், தயிர் விலையை உயர்த்தியற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன் கடைகளில் கூடுதலாக சர்க்கரை வழங்கப்படும், உளுத்தம் பருப்பு வழங்கப்படும், எரிவாயு உருளைக்கு மானியம் வழங்கப்படும், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்,

நகைக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அனைத்துக் கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தியதோடு ஆவின் நெய் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது "உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் கணிப்பு

OPS has urged the DMK government to roll back the increase in prices of products like ghee and butter in Aavin company

ஆவின் பொருட்களில் விலை உயர்வு

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, ஒன்றரை ஆண்டுகளில் பால் பொருட்களின் விலை அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி எழையெளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க. அரசு. இவையெல்லாம் போதாதென்று, தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 535 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்று சொல்லி, 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய்யின் விலையை 580 ரூபாயாக இரண்டாவது முறை உயர்த்தியது. 

OPS has urged the DMK government to roll back the increase in prices of products like ghee and butter in Aavin company

3வது முறையாக அதிகரித்த நெய் விலை

தற்போது மூன்றாவது முறையாக ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து . 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது 515 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சாதாரண நெய்யின் விலை தற்போது 630 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, நெய்யின் விலை சுமார் 23 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது போதாது என்று வெண்ணெயின் விலையையும் கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது தி.மு.க. அரசு. தொடர்ந்து மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை கமத்திக் கொண்டேயிருக்கின்ற தி.மு.க. அரசின் மக்கள் விரோதம் செயல்பாட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 பரிசு தொகை..! வங்கியின் மூலம் வழங்க திட்டமா.? முதலமைச்சர் நாளை அவசர ஆலோசனை

OPS has urged the DMK government to roll back the increase in prices of products like ghee and butter in Aavin company

திமுக ஆட்சியை வீழ்த்தி விடும்

இந்த விலை உயர்வின்மூலம் ஏழையெளிய மக்கள் நேரடியாக் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கி வருகிறது. தி.மு.க.வின் முன்னுக்குப் பின் முரனான நடவடிக்கைகளைப் பார்த்து 'உபகாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமலிருந்தால் சரி' என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கொண்டுவிட்டார்கள். உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் இல்லையெனில், மக்கள்படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !

Follow Us:
Download App:
  • android
  • ios