பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 பரிசு தொகை..! வங்கியின் மூலம் வழங்க திட்டமா.? முதலமைச்சர் நாளை அவசர ஆலோசனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக 1,000 ரூபாய் வழங்குவது தொடர்பாக நாளை (19.12.2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ரூ.1000 பொங்கல் பரிசு
விவசாயத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பாக வேட்டி, சேலை போன்றவை ரேசன் கடையில் வழங்கப்பட்டது. இதனையடுத்து பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், கரும்பு என பொருட்கள் வழங்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக கொரானா பாதிப்பில் இருந்த மக்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அதிமுக அரசு காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு 21 பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியது, அந்த பொருட்கள் தரமற்று இருந்ததாகவும் , 21 பொருட்களுக்கு பதிலாக 15, 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புகார் எழுந்தது.
முதலமைச்சர் நாளை ஆலோசனை
இதனையடுத்து அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வழங்குவதை விட பணமாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் விரும்பும் நிலைதான் உள்ளது. எனவே இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக கூட்டுறவுத்துறை பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கலாமா.? அல்லது எப்போதும் போல் ரேசன் கடைகளில் இருந்து வழங்கலாமா என விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !