ரூ.5 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச்.! வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா.?அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்

5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

Senthil Balaji has questioned whether Annamalai is ready to release the receipt for the purchase of Raphael watch worth 5 lakh rupees

அண்ணாமலையும் ரஃபேல் கைக்கடிகாரமும்

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாஜக மாநலி தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பாக சமூகவலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். தற்போது நான் போடும் சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் மற்றும் கார் எல்லாவற்றையும் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கிறது.

நான் கையில் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு கைக்கடிகாரம். ரஃபேல் விமானத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் மொத்தம் 500 கைக்கடிகாரங்களை தயாரித்தது. ரஃபேல் ஓட்ட கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !

Senthil Balaji has questioned whether Annamalai is ready to release the receipt for the purchase of Raphael watch worth 5 lakh rupees
கைக்கடிகாரத்தின் ரசீதை வெளியிட முடியுமா.?

இந்தநிலையில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

 

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? ' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். இதற்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளிப்பாரா ? என சமூகவலை தளத்தில் திமுக மற்றும் பாஜகவினர் காத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டின் நம்பர் 1 நடிகர்.. சினிமா, அதிகாரம் எவ்வளவு நாளுக்கு? திமுகவுக்கு சவால் விடும் அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios