OPS vs EPS : எடப்பாடி அணிக்கு எந்த கட்சியும் கூட்டணி வர மாட்டங்க.. அந்த குழு ஒரு டம்மி குழு - சீறும் ஓபிஎஸ்

எங்கள் கூட்டணியின் தலைமை  பாஜக  தான், அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

OPS has said that no party will form an alliance with the Edappadi team KAK

இந்தியா கூட்டணி  ஆண்டிகளின் மடம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் உரிமை மீட்பு  கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,   கடந்த பத்தாண்டு காலம் இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

10 ஆண்டு காலமாக சிறப்பாக ஆட்சி செய்த மோடியே பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலு பெற்று இருக்கிறது ஆகவே பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என தெரிவித்தார். இந்தியா கூட்டணி  ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இந்தியா கூட்டணி இந்தியாவை ஆள முடியாது ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லையென நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

OPS has said that no party will form an alliance with the Edappadi team KAK

பாஜக கூட்டணிக்கே ஆதரவு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி  அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைக்கப்பட்ட குழு எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு தான். எனவே எடப்பாடி அணி எந்த நேரத்திலும் வெற்றி பெற முடியாது  என தெரிவித்தார். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜக என தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், எங்கள் கூட்டணிக்கு வர நிறைய கட்சிகள் தயாராக இருப்பதாக கூறினார்.

சசிகலாவை சந்தர்ப்பங்கள் கூடி வரும் போது உறுதியாக சந்திப்பேன் என தெரிவித்த அவர், தமிழகத்தில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையாது எந்த கட்சியும் அவருடன் போக தயாராக இல்லை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறாது என ஓ.பன்னீர் செல்வம்  திட்டவட்டமாக கூறினார். 

இதையும் படியுங்கள்

தருமபுரி எம்.பி. செந்தில்குமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்காதீங்க.? திமுக தலைமையில் திடீர் புகார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios