ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லாமல், அழிவு பாதையில் செல்லும் ஆவின்..! திமுக அரசை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பாலினை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதே நிலைமைதான் வெண்ணெய், நெய் மற்றும் இதர பொருட்களை வாங்குவதிலும் நீடிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

OPS has alleged that the Aavin administration is on the path of destruction

ஆவின் பால் தட்டுப்பாடு

ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை கடந்த 22 மாதங்களாக ஆவின் நிறுவனத்தில் நிலவுகிறது. தமிழ்நாட்டு மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத நிலை நிலவுகிறது. தி.மு.க. அரசின் செயல்பாட்டினைப் பார்க்கும்போது, 'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன்' என்ற பழமொழிதான் மக்களின் நினைவிற்கு வருகிறது. 

அதிகரிக்கும் இன்புளுயன்சா காய்ச்சல்..! அறிகுறிகள் என்ன.? ஆர்டிபிசிஆர் சோதனை யார் செய்வேண்டும்.? அரசு அறிவிப்பு

OPS has alleged that the Aavin administration is on the path of destruction

பொதுமக்கள் பாதிப்பு

ஆவின் நிறுவனம் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்வதற்குப் பதிலாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க, அரசின் திறமையின்மைக்கு, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, பால் மற்றும் அதன் உப பொருட்கள் விநியோகத்தை குறைப்பது, பால் விலையினை அவ்வப்போது உயர்த்துவது, உப பொருட்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் ஆகியவற்றின் விலையினை அடிக்கடி உயர்த்துவது, எடைக் குறைப்பு என பல்வேறு குளறுபடிகளை ஆவின் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. அண்மைக் காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும்,

OPS has alleged that the Aavin administration is on the path of destruction

ஆவின் பொருள் இருப்பு இல்லை

கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 10 இலட்சம் லிட்டர் பால் காரணமாக அட்டைதாரர்களுக்கு மட்டுமே பால் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், காலதாமதமாக சென்றால் அவர்களுக்கும் கிடைப்பதில்லை என்றும், சில்லறை விலையில் ஆவின் பால் பாக்கெட்டினை வாங்குவது என்பது ஏழையெளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது மட்டுமல்லாமல், கடந்த பத்து நாட்களாக எந்த ஆவின் பாலகத்திலும் வெண்ணெய் இருப்பு இல்லை என்ற நிலைமை இருந்து வருகிறது. பாதாம் பவுடரை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டதாக ஆவின் பாலக உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

OPS has alleged that the Aavin administration is on the path of destruction

திமுக அரசின் அலட்சியம்

ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பாலினை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதே நிலைமைதான் வெண்ணெய், நெய் மற்றும் இதர பொருட்களை வாங்குவதிலும் நீடிக்கிறது. தி.மு.க. அரசின் பெத்தனப் போக்கு காரணமாக, கூடுதல் சுமைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு முன்கூட்டியே தி.மு.க. அரசு தீர்வு கண்டிருந்தால், பால் பற்றாக்குறை என்ற பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. எனவே இந்த நிலைமைக்குக் காரணம், தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குதான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

OPS has alleged that the Aavin administration is on the path of destruction

தீர்வு காணப்பட வேண்டும்

நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் செல்கிறதே தவிர, எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆவின் நிறுவனத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம்..! தமிழக அரசு எச்சரிக்கை.! என்ன காரணம் தெரியுமா.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios