விக்கிரவாண்டி. நாங்குநேரி இடைத் தேர்தலில் திமுகவின் விக்கிரவாண்டி வேட்பாளர் அதிமுக வேட்பாளரை அறிவித்தது. இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவிப்பதற்காக நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் சி.வி.சண்முகத்துக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். சி.வி.எஸ் தனது ஆதரவாளர்களை நிற்கவைக்க காய் நகர்த்தும் நேரத்தில், ஓபிஎஸ் தனது விசுவாசி லட்சுமணனை களத்தில் இழுத்துவிட செக் வைக்க இருவருக்கும் முட்டிக்கொண்டதாம். 

எதற்காக ஓபிஎஸ் இவ்வளவு மெனக்கெடனும்? கடந்த வருஷம் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்த ராஜ்ய சபா எம்.பி. லட்சுமணனை அந்தப் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமித்தார்கள். தர்மயுத்தம் நடத்திய சமயத்தில் பன்னீரின் தீவிர விசுவாசியாக இருந்த லட்சுமணனின் பதவிப் பறிப்பில், பன்னீரே கையெழுத்து போட்டது பயங்கர சம்பவம் நடந்தது. பல நெருக்கடிக்கு இடையில் தான் அதைச் செய்தார் ஓ.பன்னீர் என லட்சுமணனுக்கு புரிந்தது. அப்போது புதிதாக மா.செ ஆக நியமிக்கப்பட்டவர்கள் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்,  சி.வி.சண்முகம் மட்டும் பன்னீரை சந்திக்கவே இல்லை. தர்மயுத்தம் நடத்திய பன்னீருக்கு ஆதரவாக இருந்த லட்சுமணனின் பதவியை காவு வாங்கிய அமைச்சர் சி.வி.எஸ் கொடுத்தார்   ஓபிஎஸ். ஆனால் சி.வி.எஸ் மட்டும்  ஓபிஎஸ்ஸை கண்டுக்கவே இல்லை.

இப்போதைய சூழலில் எம்.பி பதவியும் முடிந்துவிட்ட நிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் தான் நிற்க பன்னீரிடம் கேட்டுள்ளார் லட்சுமணன். ஆனால், சிவிஎஸ்ஸோ தனது விசுவாசியை தான் களமிறக்கணும் என விடாப்பிடியாக இருந்தார்.  ‘நான் சொல்றவங்களை நிறுத்தினா மட்டுமே ஜெயிக்க முடியும் என கறாரா சொல்லிட்டாராம். ஒருகட்டத்தில் ஓபிஎஸ்ஸா, சிவிஎஸ்ஸா யாரையும் சமாதானம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், திமுகவில் பொன்முடியின் நண்பர் புகழேந்தியை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக எதிர்பார்த்த அளவுக்கு அவர் ஒன்னும் அவ்வளவு பெரிய வெயிட்டு கை இல்லை,  சி.வி.எஸ் பொறுத்தவரைக்கும் விழுப்புரத்தில் மாஸ் லீடர். பொன்முடியை முதல்முறை தோற்கடித்தது மட்டுமில்லாமல், அடுத்த தேர்தலில் பக்கத்து தொகுதியான திருக்கோவிலூருக்கு ஓடவிட்ட  தெம்பில் இருப்பதால் அரசு எந்திர பலத்தோடு விக்கிரவாண்டியில் ஜெயிச்சிடலாம் என நம்பியுள்ளார். சி.வி.எஸ் நிறுத்தும் நபரை வேட்பாளர் ஆக்குவதா? ஓ.பி.எஸ் சிபாரிசு செய்யும் லட்சுமணனை வேட்பாளராக ஆக்குவதா? என்ற குழப்பத்தில் கூட்டம் முடிக்கப்பட்டது.

இந்நிலையில், 2016 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தினால் என்ன என்ற எண்ணமும் இ.பி.எஸ், கூட்ட முடிவில் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நேற்று காலை அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடக்கூடும். அதில் சி.வி.எஸ் வெல்லக் கூடும் என்பது தான் அதிமுக கூறும் தகவல் ஓ.பி.எஸ்ஸுக்கும், சி.வி.எஸ்க்குமான மோதலை கூட்டம் மீண்டும் புதுப்பித்துவிட்டிருக்கிறது.

முத்தமிழ்ச்செல்வனுக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கிடைக்க 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தவர் தான் டாக்டர் லட்சுமணன். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது லட்சுமணன் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து அவர் பக்கம் சென்றார். அப்போது ஒன்றியச் செயலாளராக இருந்த முத்தமிழ்ச் செல்வனை லட்சுமணன் ஓ.பி.எஸ் அணிக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் நேராக சி.வி.எஸ்ஸிடம்  சரணடைந்து அவரது ஆதரவாளராக மாறினார். அன்று முதல் இன்று வரை சி.வி.எஸ்ன் விசுவாசியாக இருக்கிறார் முத்தமிழ். மொத்தம் 36 பேர் விருப்பமனு அளித்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில், இக்கட்டான சூழலில் தன்னோடு இருந்த காரணத்திற்காக முத்தமிழ்ச் செல்வனை டிக் அடித்துள்ளார் இபிஎஸ்.