நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா பாணியில் கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவை ஏற்க, அதிமுக, முன்வந்துள்ளது. இதுகுறித்து அதிமுக, வட்டாரத்தில்; ஜெயலலிதா மறைவிற்கு பின், அதிமுக,வில் இருந்து ஓரங்கப்பட்ட தினகரன், அமமுக கட்சியை துவக்கி, அதிமுகவைப் போலவே கூட்டணி ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். ஆனால் அவரை சீண்டக்கூட ஆளில்லா நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற, திமுக, பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு, 'சீட்' ஒதுக்குவதில், திமுக, முரண்டு பிடிப்பது, கூட்டணி கட்சிகள் திகிலில் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அடித்து வீழ்த்திய 'கஜா' புயல் நிவாரண பணி, பிளாஸ்டிக் தடை விதிப்பு, பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய், இனமாக, 2,000 ரூபாய் போன்றவை, அதிமுக, அரசுக்கு ஆதரவாக உள்ளன. இந்த சூழலில், பிஜேபி, - பாமக, - தேமுதிக., உள்ளிட்ட கட்சிகளுடன், அதிமுக, பேச்சு நடத்தி வருகிறது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அதிமுக, வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, கூட்டணியில் இடம் பெறும் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கும், பணம் வழங்குவார். அதே பாணியில், தற்போது, அதிமுக ஒருங்கிணைணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவுகளை ஏற்க முடிவு செய்துள்ளனர். அதிமுக,விற்கு ஆதரவளிக்கும் தோழமை கட்சிகள், ஜாதி சங்கங்களுக்கு, 'சீட்' ஒதுக்க முடியாமல் போகும் பட்சத்தில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதிமுக, முடிவு செய்துள்ளதாம்.