பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துவிட்டது. இதே போல் அதிமுகவுடனான கூட்டணியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உறுதி செய்துவிட்டார்.

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துவிட்டது. இதே போல் அதிமுகவுடனான கூட்டணியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உறுதி செய்துவிட்டார்.

கூட்டணி உறுதியானாலும் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை இடம் என்பதில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. சுமார் 40 தொகுதிகள் வரை பாஜக எதிர்பார்க்கிறது. ஆனால் அதிமுகவோ பாஜகவிற்கு 21 தொகுதிகள் என்று முடிவுசெய்து வைத்துள்ளது. இதனை ஏற்க தமிழக பாஜக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். கடந்த நான்கு வருடம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடர காரணமே பாஜக தான் என்று அவர்கள் கூறி வருகின்றனர். எனவே அதற்கு ஏற்ப, சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது.

ஆனால் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 2 சதவீதத்திற்கும் குறைவு என்று அதிமுக கருதுகிறது- எனேவே இதற்கு தகுந்தாற்போல் 21 தொகுதிகள் வரை கொடுப்பதே அதிகம் தான். எனவே 21 தொகுதிகள் என்பதே நல்ல ஆப்சன் தான் என்று அதிமுக பாஜகவிடம் கூறி வருகிறது. ஆனால் தமிழக பாஜக இதில் பிடிவாதம் காட்டுகிறது. எனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்த அதிமுக காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து இருவரும் பேச்சு நடத்துவார்கள் என்கிறார்கள். தொடர்ந்த ஜே.பி.நட்டா முன்னிலையில் உடன்பாடு எட்டப்படும் என்றும் பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்புகளுடன் டெல்லி செல்ல ஓபிஎஸ் – இபிஎஸ் ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம் 41 தொகுதிகள் தேவை என்கிற விவரத்துடன் தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது. எங்கு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களோடு தமிழக பாஜகவினரும் டெல்லியில் உள்ளனர். இந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சுடன் டெல்லி செல்வதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க உள்ளது.