Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் கோஷ்டி மோதல்... சுக்கு நூறாய் உடையும் நிர்வாகம்... உச்சகட்டத்தில் உற்சாகத்தில் அதிமுக நிர்வாகிகள்!

வெளியே உறவு, உள்ளுக்குள் பகை என்கிற போக்கு அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பினரைடையே உச்சத்தை தொட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் கோஷ்டிகளை சமாளிக்க முடியாததால் இரு தரப்பினரும் முக்கிய முடிவெடுக்க கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

ops-eps fighting newly formed district secretaries
Author
Tamil Nadu, First Published Dec 29, 2018, 10:40 AM IST

வெளியே உறவு, உள்ளுக்குள் பகை என்கிற போக்கு அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பினரைடையே உச்சத்தை தொட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் கோஷ்டிகளை சமாளிக்க முடியாததால் இரு தரப்பினரும் முக்கிய முடிவெடுக்க கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ops-eps fighting newly formed district secretaries

மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் என பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து ஆட்சியையும் கட்சியையும் கரைசேர்க்க பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது அதிமுக. ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளையும் சமாளிக்க பகீரத பிரயத்தனம் நடத்தி வருகிறது அந்தக் கட்சி தலைமை. ஆனாலும் கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.

 ops-eps fighting newly formed district secretaries

இரு அணிகளையும் சமாதானப்படுத்தும் வகையில் 52 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகளை வழங்க முடிவெடுத்திருக்கிறது அதிமுக.  புதிய மாவட்ட செயலாளர்கள் உருவாக உள்ளனர். முக்கியமான மாவட்டங்களில் அதிமுகவின்ம் அமைச்சர்களையே மாவட்ட செயலாளர்களாகவும் அறிவிக்கும் திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில் திருவண்ணாமலைக்கு சேவூர் ராமச்சந்திரனும், விழுப்புரத்திற்கு சி.வி.சண்முகமும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ops-eps fighting newly formed district secretaries

அமைச்சர்கள் அனைவரையும் மாவட்ட செயலாளராக்க உள்ளனர். மீதமுள்ள இடங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளார்கள். அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை சரிகட்டுவதற்காக மாவட்டங்களைப் பிரித்து மக்களவை தொகுதிகளுக்கு ஏற்ப மாவட்டங்களும் அந்த மாவட்டத்தை  இணைக்கும் மண்டலங்களையும் அதிமுக உருவாக்க இருக்கிறார்கள். இதன் முதல் கட்டமாக திருச்சி கரூர் மாவட்டங்களை ஒரு சில தினங்களில் பிரித்து புதிய மாவட்டத்தை அறிவிக்க இருக்கிறது அதிமுக தலைமை.

Follow Us:
Download App:
  • android
  • ios