தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக பொதுமக்களை சந்திக்க ஓபிஎஸ் - தீபா இருவரும் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து பிரச்சாரம் துவங்கவுள்ளனர்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக பதவியேற்ற ஓபிஎஸ் பொது செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றனர்.

மக்கள் ஆதரவுடன் செயலாற்றி வந்த ஓபிஎஸ்சுக்கு திடீர் நெருக்கடி கொடுத்தார் சசிகலா.

சசிகலா பொது செயலாளர் ஆனதற்கு பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் திடீரென கடந்த 5ஆம் தேதி சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வானார்.

இதையடுத்து ஓபிஎஸ் ராஜினமா செய்தார்.இது அதிமுக தொண்டர்கள் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் வந்தது.இந்நிலையில் 2 நாட்கள் கழித்து 7ஆம் தேதி ஓபிஎஸ் திடீரென போர்க்கொடி தூக்கினார்.

இதனால் ஒரே நாளில் ஓபிஎஸ் ஹீரோ ஆனார்.இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர் தரப்புக்கு தாவி விடாமல் இருக்க அவர்களை கூவத்தூரில் சசிகலா தரப்பினர் தங்க வைத்தனர்.

சசிகலா முதல்வராக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்தனர்.

எம்எல்ஏக்களை அடைத்து வைத்ததை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர்,எதிர்கட்சிகள் விமர்சித்தனர்.

இதற்கிடையே ஜெ. சமாதியில் ஓபிஎஸ்சை தீபா திடீரென சந்தித்தார்.இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தனர்.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது.

இந்நிலையில் எடப்பாடியை பதவியேற்க கவர்னர் அழைத்தார்.

எடப்பாடி பதவியேற்று 18ஆம் தேதி பெரும்பான்மையை நிருபித்தார்.

வாக்கெடுப்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பதவியேற்றதை ஏற்று கொள்ளவில்லை.

ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிக்கே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து கட்சியும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதால் மக்களிடம் நியாயம் கேட்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று ஓபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவே தமிழகம் முழுவதும் தீபாவுடன் இணைந்து சுற்றுபயணம் மேற்கொள்வதாகும்.

பிப். 24 ஜெயலலிதா பிறந்தநாள் வருகிறது.அன்றிலிருந்து பிரசார பயணத்தை துவக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தீபாவும் ஓபிஎஸ்சும் நீதிகேட்டு பிரசார பயணம் செல்லவுள்ளனர்.