மறைந்த முதல்வர் ஜெ
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அம்மா, அம்மா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து ,அதிமுக பொதுச் செயலாளராக தற்போது பதவியில் உள்ள சசிகலாவை “ சின்னம்மா “ என பம்பி பம்பி அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தது.
சின்னம்மா என்றழைத்த ஓபிஎஸ்:
முதல்வர் ஒ பி எஸ் அவர்களும், கட்சி ரீதியாக அவருடன் இருக்கும் போது சின்னம்மா என்று தான் அழைத்து வந்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண அரசியல் சூழலால், சின்னம்மா என்றழைத்த முதல்வர் ஒபிஎஸ்,முதன் முறையாக சசிகலா என அழைத்தார்
இனி நோ சின்னம்மா ....பெரியம்மா
இதிலிருந்து இனி வரும் நாட்களில் சின்னம்மா பெரியம்மா , சின்ன சின்னம்மா எனவெல்லம் அழைக்கப்படுவது இருக்காது என எதிர்பார்க்கலாம் .
அதே வேளையில், பாட்ஷா பட ரஜினி போன்று , அதிரடியாக செயல்பட்டு வருகிறார் ஒபிஎஸ். இதனை தொடர்ந்து அனைவரின் உள்ளத்திலும் தற்போது ஹீரோவாகத்தான் உள்ளார் ஒபிஎஸ்
