கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்..!
கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி.தினகரன் சந்திப்பு. அதுவும் நகைசுவையும், கோமாளித்தனமும் நிறைந்த சந்திப்பாக தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவியின் சந்திப்பை தமிழகம் வியந்து பார்க்கிறது.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திடீரென அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு சென்று சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திடீரென அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு சென்று சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி.தினகரன் சந்திப்பு. அதுவும் நகைசுவையும், கோமாளித்தனமும் நிறைந்த சந்திப்பாக தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவியின் சந்திப்பை தமிழகம் வியந்து பார்க்கிறது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் சந்திப்பு இரண்டு அமாவாசைகள் ஒன்று சேர்வதாகும். ஓபிஎஸ்-டிடிவி இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது சின்னம்மா சின்னம்மா என்று பேசுகிறார். டிடிவியை பொறுத்தவரையில் அவரை போன்று ஒரு கிரிமினலை பார்க்க முடியாது, அவரை போன்று ஒரு அரசியல் வியாபாரியும் கிடையாது ஓபிஎஸ் சாடினார். எந்த காலத்திலும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படமாட்டார்கள். விரைவில் ஓ.பன்னீர்செல்வத்தை டிடிவி.தினகரனும் கழற்றிவிடுவார். வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக ஜெயக்குமார் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
முன்பு ஜெயலலிதா மரணதத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறியவர் இப்போது சந்தேகம் இல்லை என்று ஓபிஎஸ் கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் சந்தித்தது சந்தர்ப்பவாதம் என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்தால் தமிழகத்திற்கு இருண்ட காலம்தான். துரோகி ஓபிஎஸ்க்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது. ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ளும்படி பாஜக எங்களை நிர்பந்திக்காது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. ஆனால், பாஜவோடு ஓபிஎஸ், டிடிவி இருந்தால் தலைமை யோசித்து முடிவெடுக்கும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.