ops and ttv cadres fight in rk nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி டி.டி.வி. தினகரனும் மதுசூதனனம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரச்சாரத்தின் போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, ஒ.பி.எஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதில் ஜெயலலிதா காப்பாற்றி வந்த ஆட்சியும் கட்சியும் சசிகலாவிடம் சென்றது.

ஆனால் அதை அனுபவிக்க வழியில்லாமல் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இரட்டை இலை சின்னத்திற்கு இருதரப்பும் போட்டியிட்டதால் அச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதைதொடர்ந்து டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்விளக்கு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி சசிகலா தரப்பினரும், ஒ.பி.எஸ் தரப்பினரும் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கொருக்குப்பேட்டை பாரதி நகர் 4 வது தெருவில் இருதரப்பும் சந்திக்க நேரிட்டது. இதில் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதாம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆர்.கே.நகர் பரபரப்புடன் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருதப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.