ops and eps both are my binamis says dinakaran

ரெய்டு அடைமழை ஓய்ந்தாலும் கூட சர்ச்சை, விசாரணை வெள்ளம் இன்னமும் வற்றிவிடவில்லை. சசி வகையறாவின் சொத்துபத்துக்கள் குறித்து மீடியாக்கள் வெளியிடும் பட்டியல்கள் மெர்சலாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு இணையாக தினகரன் கொடுக்கும் அசால்ட் பேட்டிகள் பேயறைய வைக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் முதலமைச்சர்களான நம்ம ரெட்டைகுழல் துப்பாக்கியை பற்றி தினா சொல்லியிருக்கும் கமெண்ட் அவர்களை கசாமுசாவென காண்டாக்கியிருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்படி என்ன சொல்லிட்டார் தினா...”ஏதோ பழி எடுப்பதற்காக இந்த ரெய்டை நடத்துறாங்கன்னு நினைச்சோம். ஆன இவ்ளோ பெருசா நடத்துவாங்கன்னு நினைக்கலை (இப்டியெல்லாம் ஓப்பனா பேச உங்களால மட்டுந்தேன் முடியும்ணே!).

பாஸ் நீங்களெல்லாம் நினைக்கிற மாதிரி இது கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில்ல, அவங்களோட வெறுப்பு அரசியல் வெளிப்பாடுதான் இது. எங்கள் குடும்பத்தை ஒழிக்கணும் அப்படின்னு டார்கெட் வெச்சு அடிக்கிறாங்க. 

கறுப்புப் பணத்தை ஒழிக்கணும்னா எங்களோட சொந்தங்களிடம் வந்திருக்க கூடாது. அவங்க எங்கே ரெய்டு நடத்தியிருக்கணும் தெரியுமா? எங்களின் பினாமிகளான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ரெண்டு பேர் வீட்டில்தான் ரெய்டு நடத்தியிருக்கணும். உண்மையில் அவங்கதான் எங்களோட பவர்ஃபுல் பினாமிகள். 

போன ஐந்து வருஷமும், இந்த முறை ஆட்சியிலேயும் இவங்கதானே பெரும் பதவியில இருந்துட்டிருக்காங்க. இவங்க அமைச்சரவையில் இருக்கிறவங்களுக்கும் எங்களோட ஆளுங்கதான். எங்களுக்கு ஏதாவது காரியம் ஆகணும்னா இவங்க மூலமாதானே அது ஈடேறியிருக்கும். ஆக இவங்கதானே எங்களோட ரியல், பவர்ஃபுல் பினாமிகள். 
அவங்க வீடுகள்ள ரெய்டை நடத்த சொல்லுங்க.” என்று சிரித்திருக்கிறார். 

அண்ணன் ஒருவாக்கு சொன்னாலும் திருவாக்கா சொல்றாரே என சிலிர்க்கிறார்கள் தினாவின் ஆதரவுப்பேர்வழிகள்.