மொத்தம் 134 எம்எல்ஏக்கள்:

அதிமுகவில் மொத்தம் 134 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்கள் என்பது தெரிந்த ஒன்றே. இந்நிலையில், ஒட்டுமொத்த எம்எல்ஏக்கள் ஆதரவு சசிகலாவிற்கு என கூறப்பட்டாலும், தற்போது நிலைமை சற்று மாற தொடங்கியுள்ளது.

தற்போது, 35 பேர் ஆதரவு ஓபிஎஸ்க்கு...!

தற்போது, 35 பேர் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் 22 பேர் ஆதரவு தெரிவிப்பதாக கூறுகின்றனர். இந்த தருணத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்று முதல்வராக தொடர நினைத்தால் தமிழக ஆளுநர், ஓபிஎஸ் அவர்களை சட்டசபையை கூட்டி சபையில் தனக்கு உள்ள பெரும்பாண்மையை நிரூபிக்க கோருவார்.

வாய்ப்பு ...!

அவ்வாறு சட்டசபையை கூட்டும் போது திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 99 பேர் ஓபிஎஸ்க்கு தார்மீக ரீதியில் தங்கள் ஆதரவை தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்:

அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் குறைந்த பட்சம் 19 பேர் ஆதரவு தெரிவித்தால் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக உயர வாய்ப்பு உண்டு. அதே வேளையில் அதிமுகவில் ஓபிஎஸ்க்கு ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை தீர்மானம் :

சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அப்போது மொத்த உறுப்பினர்களான 234ல் சரிபாதிக்கு மேல் உறுப்பினர்களின் ஆதரவை, பெற்று நம்பிக்கை தீர்மானம் ஓபிஎஸ்க்கு சாதகமாக நிறைவேற வாய்ப்பு உள்ளது

கால அவகாசம் :

இந்நிலையில், அரசியல்சாசனப்படியான இந்த நடைமுறைக்கு தேவையான கால அவகாசத்தை தமிழக ஆளுநர் ,முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.