இந்த வேலை நிறுத்தம் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் சார்ந்தது அல்ல பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இருக்கிறது, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கிவிட்டால் நாட்டினுடைய வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
பொதுத்துறை வங்கிகள் நடத்தும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை வாபஸ் பெற செய்ய வேண்டுகிறோம் என அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. 15 மற்றும் 16 ஆம் தேதி வங்கி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதைக் குறித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன,

இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும் கூடிய சீக்கிரம் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பினை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளின் சார்ந்த ஊழியர்கள் அதிகாரிகளின் கூட்டமைப்பான அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வருகின்ற 15 மற்றும் 16ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய இருக்கின்றோம்,

இந்த வேலை நிறுத்தம் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் சார்ந்தது அல்ல பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இருக்கிறது,பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கி விட்டால் நாட்டினுடைய வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும்.ஆகையால் எங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களும், அனைத்து கிராம பொதுமக்கள் அனைவரும், இந்த போராட்டத்திற்கும், வேலை நிறுத்தத்திற்கும் முழு ஆதரவு தரவேண்டும். மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
