அதிபர் தேர்தலில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தபால் ஓட்டு மோசடி செய்து போலியாக வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வருவதாகவும் எதிர்க்கட்சி மீது அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெளிநாட்டினர் தலையிடுவதை விட, தபால் ஓட்டுகளில் எதிர்க்கட்சிகள் செய்ய போகும் மோசடி தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இரு கட்சியின் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தபால் ஓட்டுக்கள் மூலம் ஒட்டுயிடுவது பற்றி அதிகமான மாகாணங்களில் ஆலோசனை நடைபெற்று வருகிறது

இதைப் பற்றி பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப்... "இந்த அமெரிக்க தேர்தலில் சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிடுவதற்கு முயற்சிப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதைவிட பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தபால் ஓட்டுகள் தான். எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி ஆளும் மாகாணத்தின் கவர்னர்கள், தபால் ஓட்டுக்கள் மூலம் ஒட்டுயிடுவதை அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால் அதிகமாக மோசடி நடைபெறும். சில பகுதிகளில் தபால் ஓட்டு சீட்டுகளை போலியாக அச்சடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இது நம்முடைய நாட்டிற்கு அவமானம். இந்த மோசடி செய்து வெல்வதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.