எதிர்கட்சிகாரன் மாதிரி பேசுறியே, உட்காரும்மா.. கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரை கலாய்த்த.. உபிஸ்..
தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களில் அதிகாரத்தை மீறி சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர் பேசுகையில், எதிர்க் கட்சிகாரன் மாதிரி பேசுறியே என திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்ட சம்பவம் மாமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களில் அதிகாரத்தை மீறி சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர் பேசுகையில், எதிர்க் கட்சிகாரன் மாதிரி பேசுறியே என திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்ட சம்பவம் மாமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது அதில் 12 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான கூட்டம் இன்று காலை தொடங்கியது, அதில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது, அதில் ஒன்றுதான் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பேச அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகாரன் மாதிரி பேசுறியே என ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்ததாகும்.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி என்றால் கூட்டணி கட்சி தவறு செய்தாலும் கூட அதை சுட்டிக்காட்ட தவறாத கட்சி ஆகும், அந்தவகையில் தற்போது திமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு எதிரான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும் போது அதை தயங்காமல் எதிர்ப்பவர்களாக கம்யூனிஸ்ட்கள் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 42 வது வார்டு உறுப்பினர் ரேணுகா மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் இது போன்று உரையாற்றினார். அவர் பேசிய விவரப் பின்வருமாறு:- பட்ஜெட் மீது உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனே விவாதம் நடத்துவது ஏற்புடையதல்ல, உறுப்பினர்களின் விவாதம் சம்பிரதாயமாக இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் மாநகராட்சிக்கு 788 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளது தெரியவருகிறது.
மாநகராட்சியின் கடன் விவரம் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை, இதன்மூலம் மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருப்பது தெரியவருகிறது. மக்களிடம் அதிக வரி மூலம் வருவாய் ஈட்டுவது சரியல்ல, சொத்து வரி வசூலித்தல் என்பது உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் உள்ளாட்சி மன்றங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசு சொத்து வரியை உயர்த்தி அரசு ஆணை நிறைவேற்றியிருப்பது உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரத்தை மீறும் செயலாகும் என பேசினார். அப்போது 14ஆவது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் பேச்சை இடைமறித்ததுடன், என்னமோ எதிர்க்கட்சிக்காரன் மாதிரி பேசுறீங்களே, கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என சத்தமிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் தனது கோரிக்கையை மட்டும் கூறினார். ரேணுகா பேசி முடித்த பின்னர் அடுத்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெறும் என துணைமேயர் மகேஷ்குமார் அறிவித்தார்.