Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. 

Opposition merger is the final nail in BJP coffin... CM stalin
Author
First Published Jun 17, 2023, 7:34 AM IST

எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்கு பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்க கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினர் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது கைது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதையும் படிங்க;- “ செந்தில் பாலாஜியை கைது செய்ய இதுதான் காரணம்.. ஆனா பாஜக நினைப்பது நடக்காது” டி.ஆர். பாலு பேச்சு

Opposition merger is the final nail in BJP coffin... CM stalin

இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமை வகித்தார். இதில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.எம்.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க;- உங்கள் கனவு பலிக்காது: திமுக கண்டனப் பொதுக்கூட்டத்தில் சீறிய ஆ.ராசா!

Opposition merger is the final nail in BJP coffin... CM stalin

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி! 

இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும்.

 

வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios