அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தனிப்பட்டது என்றும் அவர் தெரிவித்தா.
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தனிப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் பணிகளை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தனிப்பட்டது என்றும், தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறிய இபிஎஸ், சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப்பிரச்னையில்தான் வேறுபாடு உள்ளது என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சரிவர நடைபெறவில்லை எனில் சிபிஐ விசாரணை கோருவோம் என்றும் கூறினார். தலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கா..? அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா? என்று மக்கள் கேட்பதாக அவர் கூறினார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை ஒரு குடும்பச் சுற்றுலாவாகத்தான் மக்கள் பார்க்கின்றனர் என்று விமர்சித்தார்.
இதற்காக தனி போயிங் விமானம் மூலம் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் துபாய் சென்றிருக்கின்றனர். மேலும் முதல்வரின் பயணத்துக்கு முன்பாகவே, ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.அதுமட்டுமல்லாமல், சர்வதேச கண்காட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 31 ஆம் தேதி முடிவடையவுள்ளது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே கண்காட்சி இருக்கும் நிலையில், தற்போது முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரங்கத்தினை துவங்கி வைத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக குற்றச்சாட்டி உள்ளார்.
ஏனெனில், அரசு முறை பயணம் என்று சொல்லி சென்றுவிட்டு, அவர் மட்டும் துபாய் சென்று இருந்தால் பரவாயில்லை.மேலும் அந்த துறையின் அமைச்சர் மற்றும் செயலாளர் சென்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், முதலவரின் குடும்பமே துபாய்க்கு சென்றிருப்பதால் தான் மக்கள் இவ்வாறு பேசுகிறார்கள். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய, தமிழகத்துக்கு தொழில் தொடங்க முதல்வர் அங்கே செல்லவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவித்தார்.
