சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதில் பூச்சுற்றி ஒப்பாரி போராட்டம்… மதுரை அருகே பரபரப்பு…
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வின் தலைமைப் பொறுப்பை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஜெவின் தோழி சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் சசிகலாவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன.கருப்பு மையால் சசிகலாவின் புகைப்படங்கள் அழிக்கப்பட்டன. பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் அருவி கிராமமான குட்லாடம்பட்டியில் ஏராளமானோர் சசிகலாவுக்கு எதிராக காதில் பூ சுற்றி, ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரும் சசிகலாவுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.
