டிடிவி தினகரனின் தலைமையில் இயங்கும் அமமுக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்  தங்க தமிழ்ச்செல்வன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.

தேனியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனை திமுகவில் சேர்த்துக் கொள்வதால், தேனிப் பகுதியில் திமுகவின் பலம் சற்று அதிகரிக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களோ, தங்க தமிழ்ச்செல்வன் வருகையால் அதிருப்தி அடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது..

அவரை சேர்த்துக் கொண்டதால் தேனியில், திமுகவினர் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்படும் என்றுதான் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

தங்க தமிழ்ச்செல்வன் முன்பு கருணாநிதி பற்றியும், ஸ்டாலின் பற்றியும் பேசிய பேச்சுகள் தற்போது வரை திமுக நிர்வாகிகளை கொநிலையில்தான் வைத்துள்ளது.


அந்த பேச்சை திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை யாருமே மறக்கவில்லை. அவரை கட்சியில் ஒருவராக நினைப்பது மிகவும் கஷ்டம் என்றே நினைக்கிறார்கள்..

தங்க தமிழ் செல்வளை திமுகவுக்குள் இணைத்தால்  பிளவுகள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என்றும்  தொண்டர்கள் தெரிவித்தனர்.

வேறு கட்சியில் இருந்து விரட்டப்படும் நபர்களை சேர்த்து ஆதரித்து பதவிகள் வழங்க திமுக என்ன அகதிகள் முகாமா? என கேள்வி எழுப்பும் தொண்டர்கள் தங்க தமிழ்ச்செல்வன் இல்லாமலேயே ஏற்கனவே ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளோம் என நெஞ்வை நிமிர்த்தி சொல்கின்றனர்.

இந்த புதிய உறவு  திமுகவை பலப்படுத்துமா ? அல்லது பிளவை ஏற்படுத்துமா என்பது போகப் போகத்தான் தெரியும்.