டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை போட்டு கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாளை திறக்கப்பட உள்ளன. 

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகளை தமிழக அரசு கடந்த மே 7ம் தேதி திறந்தது. பல நாட்களுக்கு திறக்கப்பட்டதால் பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். 

இரண்டு நாளில் மட்டும் சுமார் 250 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் வழக்கில் நீதிபதி கருத்து குடிமகன்கள் கூட்டம் குடிமகன்களின் கூட்டத்தால் பல இடங்களில் சமுக இடைவெளி கேள்விக்குறியானது. அத்துடன் குற்றங்களும் தமிழகத்தில் டாஸ்மாக் திறந்திருந்த மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அதிகரித்து இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆதாரை கட்டாயமாக்க வேண்டும், வாரத்தில் இரண்டு நாள் தான் மதுவாங்க அனுமதி உள்ளிட்ட நிபந்தனை அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் முன்னதாக அனுமதித்து இருந்தது. 

ஆனால் பல்வேறு தரப்பினர் டாஸ்மாக் திறக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட கூட்டநெரிசலை காரணம் காட்டியும், கொரோனா பரவும் அச்சம் உள்ளதாக சுட்டிக்காட்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை புகைப்படங்களுடன் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இதனால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை உடனே மூட மே 8ம் தேதி மாலை உத்தரவிட்டது. அத்துடன் ஆன்லைனில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் . ஆன்லைனில் மதுவிற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

 இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே9ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேல்முறையீடு இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் என டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது. அத்துடன் கடை பல நாட்களுக்கு பிறேக திறக்கப்பட்டதால் முதல் நாளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்றும் அடுத்த நாளே கூட்டம் குறைந்துவிட்டதும், சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தெரிவித்தது. காலை 11 மணிக்கு விசாரணை இந்த மனுவில் பிழை இருந்ததால் அதை சரி செய்ய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இது சரி செய்யப்பட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு விசாரித்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வர் ராவ், சஞ்சய் கிஷான் கௌல், பூஷண் ராமகிருஷ்ண கவாய் ஆகியே மூன்று பேர் அமர்வு விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசின் சார்பில், வைக்கப்பட்ட வாதத்தில்,  மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் வருவாய்க்கு டாஸ்மாக் முக்கியம். டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக வேறு துறைகள் மூலம், இந்த வருவாயை ஏற்படுத்த 4 முதல் ஐந்தாண்டு காலம் ஆகலாம். ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட முடியாது நிலையில் அரசு எல்லை பாதுகாப்பு மிக அவசியமாக கருதப்படுகிறது’’ என வாதிடப்பட்டது.

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை கடைகள் திறக்கபட உள்ளது.