Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமி மாபெரும் துரோகி... திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் அணல் பறக்கும் பேச்சு!!

எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். 

opannerselvam slams edapadi palanisamy and said that edappadi is a great traitor
Author
First Published Apr 24, 2023, 10:37 PM IST | Last Updated Apr 24, 2023, 10:37 PM IST

எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக திருச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை ஏப்.24 (இன்று) நடத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற விதியை நீக்கியவர் எடப்பாடி பழனிசாமி. என்னை முதல்வராக்கியது சசிகலா, அவர் திரும்பக் கேட்டதால் கொடுத்துவிட்டு வந்தேன். எடப்பாடி பழனிசாமிக்கு யார் பதவி கொடுத்தது?

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ்-ன் வழக்கு... ஜூன்.8 தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!!

எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி அவரை வரலாறு மன்னிக்காது. எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார். கோடிக்கணக்கான பணத்தை வைத்து மாவட்டச் செயலாளர்களையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் விலக்கு வாங்கியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி மாபெரும் துரோகம் செய்துள்ளார்.  போலி பொதுக்குழுவை கூட்டி 2 ஆயிரம் கேடிகளையும், ரவுடிகளையும் உட்கார வைத்து அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இதையும் படிங்க: இது மக்களை ஏமாற்றுகின்ற செயல்... திமுகவை கடுமையாக விளாசிய சசிகலா!!

பணத்திமிரை அடக்கி, ஒடுக்கி அதிமுகவை மீண்டும் ஜனநாயகப் பாதையில் நிறுத்தும் சக்தியாக தொண்டர்கள் உள்ளனர். அதிமுகவில் உள்ள நய வஞ்சகர்களை ஓட ஓட விரட்டக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை என்று அணல் பறக்க பேசினார். முன்னதாக இந்த மாநாட்டில், வரவேற்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓர் யானையை எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கலாம், திட்டாலாம் ஆனால் யானைக்கு தான் தெரியும் யானையின் பலம். அடித்து காயப்படுத்துபவர்களுக்கு தெரியாது. ஒ.பி.எஸ்ஸின் பலம் அவர் மட்டுமே அறிவார் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios