எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா, திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்னை ஏமாற்றி என்னுடைய தொண்டர்களை அவர் பக்கம் இழுத்துக் கொண்டதாக பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது:

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்னை அரசியல் ரீதியாக ஏமாற்றி விட்டார். என்னிடம் இருந்த தொண்டர்களை அவர் பக்கம் இழுத்துக் கொண்டார். இதனால் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்குமா? என்பது சந்தேகம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடித்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். மத்தியிலும் மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.