Asianet News TamilAsianet News Tamil

நாமதான் முதலிடம்...! ஊட்டியில் உச்சி குளிர வைத்த எடப்பாடி

ooty flower fastival
ooty flower fastival
Author
First Published May 18, 2018, 11:54 AM IST


கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் முதல் கட்டமாக சென்னை ரேஸ் கிளப் சார்பில், தமிழ் புத்தாண்டு தினத்தன்று குதிரை பந்தயம் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் நடக்கிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைக் கொண்டாட்த்திற்காக காய்கறிகண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.

ooty flower fastival

கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு 122-வது மலர் கண்காட்சி வருகிற இன்று தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. வெளிநாடுகளிலிருந்து மலர்கள் கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ooty flower fastival

இந்த மலர்கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். 10.25கோடியிலான திட்டப்பணிகள் தொடங்கிவைத்து உரையாற்றினார். நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். சமூக அக்கறையோடு மின்சாரத்தை சேமிக்க வேண்டும். எனக் கூறினார்

ooty flower fastivalபுகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, மலர் கண்காட்சி என மே மாத கோடைவிடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க பல வகையிலும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சட்டம் – ஒழுங்கு பராமரிப்பில் தமிழகதான் முதலிடம் அதற்கு சான்று தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்கள்தான்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios