ஆமாம்.. திமுக ஆட்சியல் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது.. எப்படி தெரியுமா? மோடிக்கு உதயநிதி மாஸ் பதிலடி.!
மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது, எதற்கு நடந்ததுனு யாருக்கும் தெரியாது. இயக்க வரலாறு, கொள்கை, தலைவர்கள் பற்றி பேசினார்களா? கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும்.
திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;- கோவையில் தான் முதல் திராவிட இயக்க தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கலைஞர் கால்படாத இடமே இல்லை. தமிழகத்தின் முதல் வேளாண்மை பல்கலைகழகம், டைடல் பார்க், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பில்லூர் கூட்டுகுடிநீர் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கோவையில் நடைபெறும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. சேலம் மாநாட்டு நிதியாக கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக ரூ.3.37 கோடி வழங்கியுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழகத்திலேயே அதிக மாநாட்டு நிதியை கோவை மாவட்டம் வழங்கியுள்ளது. மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலேயே முதல் முறையாக 1980ல் இளைஞர் அணி என தனியாக அணி திமுகவில் தான் துவங்கப்பட்டது. தேர்தல் முன்பு அரசியல் இயக்கங்கள் எழுச்சியை காட்ட மாநாடுகள் நடத்துவார்கள். அதை இயக்கங்களே நேரடியாக நடத்தும் எந்த அணிக்கும் கிடைக்காது. ஆனால் நமது தலைவர் தேர்தலுக்கு முன் முதல் மாநாட்டை நடத்த இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அது இளைஞர்கள் மீது தலைவர் வைத்துள்ள நம்பிக்கை. அதை நாம் காப்பாற்ற வேண்டும்.
மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது, எதற்கு நடந்ததுனு யாருக்கும் தெரியாது. இயக்க வரலாறு, கொள்கை, தலைவர்கள் பற்றி பேசினார்களா? கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும்.
தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தவரை நீட் வரவில்லை, அடிமை அதிமுகவினர் பாஜக வற்புறுத்தல் காரணமாக நீட்டை தமிழகத்தில் நுழைய விட்டனர். நீட் தேர்வு தடை செய்ய, நீக்க கோரி இதுவரை 60 லட்சம் பேர் கையெழுத்துப் பெற்றுள்ளோம். தற்போது வரை தமிழகத்தில் இருந்து 9 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி ரூபாய் வரியாக ஒன்றிய அரசு பெற்று உள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுத்தது வெறும் 2 லட்சம் கோடி தான். ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு 9 லட்சம் கோடியை கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த வாரம் மத்தியபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசியுள்ளார். அவருக்கு எப்போதும் என்னுடைய நினைப்பு தான். பிறப்பால் அனைவரும் சமம் என்று தான் பேசினேன். ஆனால் இனப்படுகொலை தூண்டினேன் என பிரச்சாரம் செய்கின்றனர்.
இதையும் படிங்க;- சினிமாவை போல் அரசியலிலும் மாமன்னனாக மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலினின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
மேலும் திமுக ஆட்சியல் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்கிறார். ஆமாம் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் கலைஞர் குடும்பம் தான், நான் மட்டும் அல்ல அனைவரும் கலைஞர் பேரன்கள், வாரிசுகள் தான். ரமணா பட பாணியில் இறந்த போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு கொடுத்துள்ளது பாஜக அரசு. ஊழல் ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் பாஜக நுழைய முடியாது என்பதற்கான முன்னோட்டமாக திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது என உதயநிதி கூறியுள்ளார்.