பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் வழியில் ஏர் இந்தியா விமானத்தில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் வழியில் ஏர் இந்தியா விமானத்தில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவர் தன்னைச் சுற்றி பல கோப்புகளுடன் ஒரு காகிதத்தை கையில் வைத்து வாசிக்கிறார். பல முக்கிய நிகழ்வுகளுக்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். தனது புகைப்படத்தை ட்விட்டரில்பகிர்ந்துகொண்டுள்ள அவர், "நீண்ட விமானப்பயணம் என்பது காகிதங்கள் மற்றும் சில கோப்பு மேற்பார்வையிடுவதற்கான வாய்ப்புகள்." எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் இந்த புகைப்படம், விமானத்தில் நீண்ட பயணம் மேற்கொண்டு இருந்தபோது முன்னாள் பிரதமர்களின் படங்களை நினைவூட்டுகிறது. 

Scroll to load tweet…

இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, விமானத்தில் இருந்தபோது கோப்புகளைப் படிக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அவர் கையில் ஒரு பேனாவுடன் சில காகிதங்களை படிக்கிறார். பல கோப்புகளை முன்னணியில் காணலாம். அவர் தனது பயண நேரத்தை படிப்பதற்கு அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக நம்பியவர் என்று கூறப்படுகிறது. 

Scroll to load tweet…

அதேபோல, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் விமானத்தில் பறக்கும்போது கோப்புகளை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தவர். படத்தில், அவர் ஒரு மேஜையில், கணினியை பார்வையிட்டபடியே பக்கத்தில் உணவுத் தட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்மோகன் சிங்கும் விமானத்தில் பறந்தபோது கோப்புகளை பார்வையிடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். 

Scroll to load tweet…

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவும், விமானத்தில் இருக்கும்போது நேரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதாக நம்பினார். மறைந்த தலைவர் பறக்கும் போது கோப்புகளை படித்துள்ளனர். 

Scroll to load tweet…