சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சர்வதேச காசநோய் தினம் நிகழ்ச்சி  இன்று நடைபெற்றது. இதில் பண்மருந்து எதிர்ப்பு காசநோய்  வார்டு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். 

மக்கள் ஒத்துழைப்பு வழங்கி காச நோய் இல்லாத சென்னையை உருவாக்க வேண்டுமென மாநகராட்சி மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார். இதுவரை 86 சதவீதம் நபர்கள் காச நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் இருந்தவரை உள்ளாட்சித் தேர்தல் என்பதே நடத்தப்படாமல் இருந்து வந்தது. அதனால் மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகள் தீர்வு காண்பதில் பெரும் சிக்கல் இருந்தது. அதிமுகவின் தோல்விக்கு இது முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது. தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்ப ட்டுள்ளனர். இந்நிலையில் தேங்கிக்கிடந்த உள்ளாட்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகள் கழித்து சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக, சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலித் பெண் மேயர் இவராவார். 

மேயராக தேர்வு செய்யப்பட்டது முதலே பிரியா பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். சென்னை மாநகராட்சி வார்டு வாரியாக கள ஆய்வு செய்து வரும் இவர் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருவதுடன், சாலை குடிநீர் கழிவுநீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை சரி செய்வதே தனது முதல் இலக்கு என கூறியுள்ளார். இந்நிலையில் மக்கள் ஒத்துழைப்பு அளித்து காசநோய் இல்லாத சென்னையை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் சர்வதேச காசநோய் தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பண்மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். காசநோய் சிகிச்சையில் 

சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் மேயர் பிரியா சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 17,176 காச நோய் பரிசோதனைகள் மேற்கொண்டதில் 998 நபர்களுக்கு மட்டுமே காச நோய் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 4,348 நபர்கள் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். காச நோயால் பாதிக்கப்பட்டுள்ள 20% நபர்களுக்கு பண்மருந்து எதிர்ப்பு சிகிச்சை தேவைப் படுவதால் அவர்களுக்கான வார்டு இங்கு இன்று தொடங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டிருந்த 86 % நபர்கள் காசநோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்கள் என்றார்.

எனவே மக்கள் ஒத்துழைப்பு வழங்கி காசநோய் இல்லா சென்னையை உருவாக்க வேண்டும் எனவும் பெயர் பிரியா கூறினார். இறுதியாக அமைச்சர் சேகர் பாபு நிகழ்ச்சியில் நிறைய நபர்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளதை சுட்டிக்காட்டி முகக்கவசத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளமல் அணியுமாறும் கொரோனா நம்மை விட்டு முழுமையாக செல்ல வில்லை எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.