Asianet News TamilAsianet News Tamil

ஒருவழியாக டிசம்பர் 7ஆம் தேதி நிறைவடைகிறது வேல்யாத்திரை: மாநில முதலமைச்சர் கலந்து கொண்டு முடித்து வைக்கிறார்.

வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா டி சம்பர்- 7 ல் திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது எனவும் அதில்  மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் கலந்துகொள்கிறார்

One way or another, the Velayathri ends on December 7: the Chief Minister of the state attends and concludes.
Author
Chennai, First Published Dec 1, 2020, 1:21 PM IST

வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாடிசம்பர்- 7 ல் திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது எனவும் அதில் மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் கலந்து கொள்கிறார் எனவும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6ந்  தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு, வடக்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களின் அமோக ஆதரவை அளித்தனர். 

One way or another, the Velayathri ends on December 7: the Chief Minister of the state attends and concludes.

இடையில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாகவும், அதன் மீட்பு பணிகளில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது. நிவாரணப் பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்ச் சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் 5ந் தேதியன்று முருகனை தரிசித்து, 7ந் தேதியன்று யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடக்க இருக்கிறது. யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரும், கர்நாடக அமைச்சரும், அகில பாரத பொது செயலாளருமான திரு. CT.ரவி அவர்களும், தமிழக இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி அவர்களும், மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

One way or another, the Velayathri ends on December 7: the Chief Minister of the state attends and concludes.

தமிழ்நாடு முழுவதிலிமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெருந்திரளான எண்ணிக்கையில் அவர்களது குடும்பத்துடன் வருகை தர இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சியையொட்டி திருச்செந்தூர் முழுவதும் விழாக்கோலமாய் காட்சி அளிக்க உள்ளது. 07.12.2020 அன்று காலை 11.00 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சிகள் இனிதே தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios