எலெக்ஷன் வருதேன்னு சும்மா நின்னேன்… ஒரு ஓட்டு கார்த்திக் 'செம’ விளக்கம்…
இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக தேர்தலில் நின்று பார்த்தாகவும், ஒரு ஓட்டு கிடைத்ததே அதே வெற்றியாகும் என்றும் வேட்பாளர் கார்த்திக் கூறி உள்ளார்.
கோவை: இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக தேர்தலில் நின்று பார்த்தாகவும், ஒரு ஓட்டு கிடைத்ததே அதே வெற்றியாகும் என்றும் வேட்பாளர் கார்த்திக் கூறி உள்ளார்.
கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி இடங்களுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 9ம் தேதி நடைபெற்றது. வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வார்டில் மொத்தம் 1551 வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் சுயேட்சையாக நின்றார். ஆனால் அவர் ஒரேயொரு ஒரு ஓட்டு தான். பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவருக்கு அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் ஓட்டு போடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் சமூக வலைதளங்களில் இது பெரும் பேசும்பொருளானது. அது மட்டுமல்லாது மீம்சுகளும் இணையத்தை தெறிக்கவிட்டன.
இந் நிலையில் ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர் கார்த்திக் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
9வது வார்டில் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு தான் வாங்கினார் என்பது தவறானது. நான் இருப்பது 4வத வார்டில். அங்கு தான் எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஓட்டுகள் இருக்கிறது. 9வது வார்டில் ஓட்டே இல்லை.
இடைத்தேர்தல் என்பதால் போட்டியிடலாமே என்ற எண்ணத்தில் தான் நான் களம் இறங்கினேன். குடும்பத்தின் நிலை காரணமாக பிரச்சாரமும் சரியாக செய்யவில்லை. கிடைத்த ஒரு ஓட்டை வெற்றியாக கருதுகிறேன்.
அடுத்த தேர்தலில் 4வது வார்டில் போட்டியிட்டு ஜெயிப்பேன். பாஜகவுக்கு பெருமையை தேடி தருவேன் என்று கூறி உள்ளார்.