தமிழகத்துக்கு கிடைக்க உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் 3 திமுகவுக்கும், 3 அதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் முகமது ஜான், சந்திரகேர் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

திமுக சார்பில் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் மதிமுக சார்பில் வைகோவும் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர்.

இந்த நிலையில், தேச துரோக வழக்கை காரணம் காட்டி ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்காக அரசியல் சதி நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

பாஜகவின் இந்தத் திட்டம் குறித்து தகவல்  அறிந்த ஸ்டாலின் உடனடியாக வைகோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்படி வைகோவின்  மனுவை எதுவும் பண்ண முடியாது. ஏனென்றால் எல்லா விவரங்களும் அதுல தெளிவா இருக்கு. இந்த தேச துரோக வழக்கு தண்டனைகூட அப்பீல்ல உடைஞ்சிடும்னு சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் என்னதான்  சட்ட ரீதியா எல்லாமே சாதகமா இருந்தாலும் பாஜக எந்த எல்லைக்கும் போய் எதையும் செய்ய தயாரா இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசித்த  ஸ்டாலின் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.

அதன்படி  திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவை  கூடுதலாக வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கடுகிறது.

இதன் மூலம் வைகோவின் வேட்பு மனு ஒருவேளை நிராகரிக்கப்படும் பட்சத்தில் திமுகவின் மூன்றாவது வேட்பாளராக இளங்கோ வந்துவிடுவார். அப்போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

இன்னொரு பக்கம் வேட்பு மனுப் பரிசீலனையின்போது வைகோவின் தரப்பில் சட்ட ரீதியான அம்சங்கள் உறுதியாக முன்வைக்கப்பட்டுத் தேர்தல் அதிகாரியால் மனு ஏற்கப்பட்டுவிடும்பட்சத்தில், நான்காவது வேட்பாளர் தன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது..