குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறவுள்ளதால், பாதுகாப்பிற்கான இன்று முதல் நாளை முற்பகல் வரை அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

குடியரசு தின விழா

குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் அனுமதியின்றி டிரோன் மற்றும் ஆளில்லாத விமானங்கள் பறக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகள் மற்றும் தமிழக எல்லை பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறி்கையில், 

ரவுடி போல் கல் வீச்சில் ஈடுபட்ட அமைச்சர்..! இதுவே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் பதவி பறிபோயிருக்கும்- ஓபிஎஸ்

நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு

குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படியுங்கள்

திமுகவோடு கை கோர்த்து அதிமுக,பாஜகவை எதிர்க்கும் கமல்..! இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்க்கு ஆதரவு.! அதிரடி அறிவிப்பு