Asianet News TamilAsianet News Tamil

8 மாவட்டங்களில் மட்டும் திமுக ஆர்ப்பாட்டம் இல்லை - எங்கு, எதற்குனு தெரியுமா? 

On November 8 the day that the BJP regime withdrew the note it is going to be a black day across Tamil Nadu. DMK alliance announced.
On November 8 the day that the BJP regime withdrew the note it is going to be a black day across Tamil Nadu. DMK alliance announced.
Author
First Published Nov 6, 2017, 3:54 PM IST


பாஜக ஆட்சி ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற நாளான நவம்பர் 8 தேதியன்று தமிழகம் முழுவதும் கறுப்பு நாளாக அனுசரிக்க போவதாக காங். திமுக கூட்டணி அறிவித்திருந்தது. ஆனால் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் மட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதில்லை என திமுக அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில், வரும் நவம்பர் 8 ஆம் தேதி கறுப்பு நாளாக அனுசரிக்க போவதாக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்தது. இதைதொடர்ந்து திமுகவும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது. 

இதனிடையே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில், நவம்பர் 8 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகை, உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios