முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி ஏற்கனவே நாங்கள்  கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை டி.டி.வி. தினகரன் தலைமையில், ஆளுநரை சந்தித்த  பிறகு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 109 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் நாளை ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ, ஏதோ ஒரு பயத்தின் காரணமாக ஓபிஎஸ்ம் இபிஎஸ்ம் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாளை தினகரன் தலைமையில் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

ஆளுநரை  சந்தித்க தமிழக அரசியலில்  மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் தங்க தமிழ்செல்வன் புதிர் போட்டார்.