இதுவரை வரலாறு காணாத அளவிற்கு இந்த வைரஸின் பரவல் வேகம் உள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இது பரவிவிடும். அதே நேரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது.
ஒமைக்ரான் மிக வேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தினால் நிலைமையும் மோசமாகி விடும் என உலகப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். ஒமைக்ரான் பெருந்தொற்றின் மிக மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவரின் இந்த எச்சரிக்கை
பல நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கொரோனா வைரஸ் என்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் நீங்க முடியாது அரக்கனாக மாறியுள்ளது. குரலை என்பதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, அதனுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதேநேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி பிழவுகளுடன் உருமாறி வருகிறது. கொரோனா என்பது டெல்டா வைரஸ் ஆக உருமாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது முதல் அலையில் இருந்து இரண்டாவது அலையாக உருவெடுத்தது. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா வகை வைரஸ் அதிக பிறழ்வுகளுடன் உருமாறியுள்ளது. இதுவோ ஒமைக்ரான் வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அனைத்து நாடுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதன் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. அதில் 77 பேர் அதிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரசால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்தியாவில் தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் ஒமைக்கிறான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், டெல்டா வைரசை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. என எச்சரித்துள்ளார். இந்நிலையில் நாடு முழுதும் ஒமைக்ரான் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உலக அளவில் பல நாடுகளில் இந்த வைரஸ் வேகமெடுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் நாடுகளும் பாதியில் உள்ளன. இந்நிலையில் இந்த வைரஸ் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பாதிப்பை ஏற்படுத்தினால் நிலைமை மோசமாகிவிடும். மொத்தத்தில் ஒமைக்ரானின் மிக மோசமான கட்டத்திற்குள் நாம் நுழைய இருக்கிறோம். உலக அளவில் ஒரு மைக்ரான் மிகவும் கவலை தரக்கூடிய தொற்றாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு வேகம் அதிகமாகி வருகிறது. எனது நெருக்கமான நண்பர்கள் பலரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது விடுமுறை நாட்கள் அனைத்தையும் நான் ரத்து செய்துவிட்டேன்.

இதுவரை வரலாறு காணாத அளவிற்கு இந்த வைரஸின் பரவல் வேகம் உள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இது பரவிவிடும். அதே நேரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. ஒருவேளை டெல்டா வைரசை போல பாதி அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட நிலைமை மோசமாகிவிடும். இந்த தொற்றில் இருந்து நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்த பாதுகாப்பை கொடுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
