அப்படி இல்லாத பட்சத்தில் அரசு ஏற்படுத்தியுள்ள மையங்களுக்கு வரலாம் எனக் கூறினார். இனி வரக்கூடியவற்றில் 80% ஒரு ஒமைக்ரான் வைரஸ்தான் என்ற அவர், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும், ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், எந்த காரணத்தைக் கொண்டும் மக்கள் முககவசம் இன்றி வெளியில் வரக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் சுனாமி போல் பரவி வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், ஆனால் இது குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 1.17 லட்சம் பேர் கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 4 ,862 லிருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றாடம் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் 80க்கும் அதிகமான மாணவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாணவர்கள் அங்கு உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளரை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் ஒருசேர பரவிவருகிறது. இந்த வைரஸ் சுனாமி வேகத்தில் பரவுகிறது இது குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை, அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கொரோனா பரிசோதனை முடித்தவர்கள் முடிந்த அளவு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் அரசு ஏற்படுத்தியுள்ள மையங்களுக்கு வரலாம் எனக் கூறினார். இனி வரக்கூடியவற்றில் 80% ஒரு ஒமைக்ரான் வைரஸ்தான் என்ற அவர், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும், ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், எந்த காரணத்தைக் கொண்டும் மக்கள் முககவசம் இன்றி வெளியில் வரக்கூடாது என அவர் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி கல்லூரி நிர்வாகம் மாணவர்களை கல்லூரிக்கு வர சொல்லியோ, செமஸ்டர் தேர்வு நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
