பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் கோட்டா - புந்தி மக்களவை தொகுதி எம்.பி ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், ‘’கோடா நகரில் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் ஓம் பிர்லா நாடாளுமன்றத்திலும் எம்பிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவார். ஆளும் கட்சி எதிர்கட்சி இடையே நட்பு பாலமாக ஓம் பிர்லா செயலாற்றுவார். ராஜஸ்தான் மாநில மக்களுக்காக அரும்பாடு பட்டவர் ஓம் பிர்லாம், கோடா நகர மக்களின் பட்டினியை விரட்டி அடித்தவர்’’ என அவர் பாராட்டி பேசினார்.

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் வழி மொழிந்தார். 

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு வழி மொழிந்தார். ஓம் பிரலாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.