Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu rain: அட கடவுளே.. அடுத்த 4 நாட்களுக்கும் வச்சு செய்ய போகுதா? இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க.

மேலும், 30.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

Oh my God .. heavy rain for the next 4 days. ??  warning these distict people be carefull.
Author
Chennai, First Published Nov 29, 2021, 12:36 PM IST

குமரிக்கடல்  பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 29.11.2021: விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 30.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 01.12.2021:, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.. 

Oh my God .. heavy rain for the next 4 days. ??  warning these distict people be carefull.

02.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

03.12.2021: தென் மாவட்டங்கள்  மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
கடலூர் (கடலூர்), ஆட்சியர் அலுவலகம் கடலூர் (கடலூர்) தலா 17, சிவலோகம் (கன்னியாகுமரி) 16, களியல்  (கன்னியாகுமரி) 14, சிற்றாறு (கன்னியாகுமரி) 13, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 12, புதுச்சேரி, தக்கலை (கன்னியாகுமரி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 11, குழித்துறை (கன்னியாகுமரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வல்லம் (விழுப்புரம்), குடிதாங்கி (கடலூர்), வானமாதேவி (கடலூர்) தலா 10, திருத்தணி (திருவள்ளூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), வேப்பூர் (கடலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை),  தலா 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி), காரைக்கால் (காரைக்கால்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வாலாஜா (இராணிப்பேட்டை), பூண்டி (திருவள்ளூர்), நாகப்பட்டினம் , மணல்மேடு (மயிலாடுதுறை), காட்டுமயிலூர் (கடலூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 8 உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), நெய்வேலி  (கடலூர்) , மயிலாடுதுறை, புவனகிரி (கடலூர்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), செங்கல்பட்டு, பண்ருட்டி (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்),  அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 7.

Oh my God .. heavy rain for the next 4 days. ??  warning these distict people be carefull.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  வங்க கடல் பகுதிகள் 29.11.2021: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 30.11.2021  தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக 30.11.2021: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும்.

01.12.2021: தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் அரபிக்கடல் பகுதிகள் 29.11.2021: தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios