கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சாஸ்தா கோவிலில் 2 அடி உயர ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகள், மற்றும் புராதன பொருட்கள் கொள்ளையிட்டு அவைகள் வெளிநாட்டு ஏஜென்ட்களுக்கு விற்க்கப்பட்டு, நாடு கடத்தும் சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

அது போன்று காணாமல் போகும் சிலைகளை மீட்பதற்காகவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்ற தனி பிரிவு ஏற்படுத்தி கொள்ளையிடப்பட்டு பின்னர் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் கடும் சவாலுக்கு பின்னர் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒரு புறம் காவல் துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது, ஆனாலும் மறுபுறம் சிலை கடத்தல் சம்பவங்கள் முடிவுக்கு வந்தாக தெரியவில்லை. அந்த வகையில்  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி குளக்கரை அருகே அருள்மிகு சுயம்பு லிங்கம் செல்லம் சாஸ்தா கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த கோவிலில் தினசரி ஒரு வேளை பூஜை நடக்கிறது, நேற்று கோயில் பூசாரி பூஜை செய்து விட்டு  சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் கோயில் நடை திறக்க முயன்றபோது கோவிலின் வாசலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலிலிருந்து ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் நாகர்கோவில் வடசேரி போலீசில் புகார் செய்தார் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.