'தர்பார்' படத்திற்கு நஷ்டஈடு கேட்பவர்களை ஆபீஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது! என்று திமுக முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி பதிவிட்டிருப்பது ரஜினியை தெம்படையச் செய்திருக்கிறது.

‘தர்பார்’ படத்தை வாங்கிய பெரும்பாலான வினியோகஸ்தர்கள் “ எங்களுக்கு தர்பார் படம் லாபம் சம்பாதித்து கொடுத்தது என்றார்கள். திடீரென ஒரு சில வினியோகஸ்தர்கள் எங்களுக்கு தர்பார் படம் 20கோடி ந~;டம் ஏற்பட்டிருக்கிறது என்று ரஜினி வீட்டிற்கு சென்ற வினியோகஸ்தர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பபட்டிருக்கிறார்கள். ‘தர்பார்’ படம் ரஜினி அரசியலுக்கு வர இருக்கும் நிலையில் இந்த படம் முக்கியவாய்ந்ததாக இருக்கிறது. வினியோகஸ்தர்களை இழப்பீடு கேட்டு அனுப்பியதன் பின்னனியில் அரசியல் கட்சி இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
‘லைகா’ நிறுவனம் 250 கோடியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தர்பார் படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த போலீஸ் அதிகாரியாகவும் கதாநாயகியாக நயன்தாராவும் நடித்திருக்கிறார்கள். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தர்பார் படம் ரிலீஸ் ஆனது. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகியது. உலகமெங்கும் ஏழாயிரம் திரையரங்குகளில் தர்பார் படம் ஓடியது. இந்த படம் வெளியான நான்கு நாட்களிலேயே 150 கோடி வசூலானது. பட வினியோகஸ்தர்கள் தர்படம் எங்களுக்கு நல்ல வசூல் கொடுத்த என்கிற மகிழ்ச்சியில் இருந்தார்கள்.இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 


ஏற்கனவே நடித்த பாபா, குசேலன், லிங்கா ஆகிய படங்கள் நஷ்டம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வினியோகஸ்தர்கள் ரஜினியிடம் இழப்பீடு பெற்று சென்றார்கள். அந்த ருசியில் அரசியல் கட்சியின் தொடர்பில் இருக்கும் வினியோகஸ்தர்கள் ரஜினியிடம் பணம் பறிப்பதற்காக இப்படி கிளம்பியிருக்கிறார்கள் என்று விமர்சனம் தற்போது எழுந்திருக்கிறது.
தர்பார் படத்திற்கு நஷ்டஈடு கேட்பவர்களை ஆபீஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது! என்று திமுக முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி டிவிட்டரில் பதிவிட்ட பிறகு ரஜினியை மிரட்டி வரும் வினியோகஸ்தர்கள் அடக்கி வாசிக்கிறார்கள் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 

T.Balamurukan