Asianet News TamilAsianet News Tamil

ஜெருசலேம் செல்ல சலுகை.. ஹஜ் யாத்திரைக்கு சலுகை.. இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா.? ஆவேச அர்ஜூன் சம்பத்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசை அதன் கூட்டணி கட்சிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஸ்டாலினை தவறாக வழிநடத்திவருகிறது. 

Offer to go to Jerusalem .. Offer for Hajj pilgrimage .. Are only Hindus ? Furious Arjun Sampath.
Author
Chennai, First Published Dec 3, 2021, 4:03 PM IST

இஸ்லாமியர்களுக்கு ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்ல மானியம், ஆனால் இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் ஐயப்ப பக்தர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு டோல்கேட் கட்டணம் இலவசம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பாராட்டு பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கை மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது. ஆனால் வெள்ள விவகாரத்தில் அந்த அளவிற்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். வெள்ள பாதிப்பின்போது மீட்டு,நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் அரசு மீது இருந்து வருகிறது. அதே நேரத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, தற்போது ஆளும் கட்சியாக உள்ள நிலையிலும் சரி தொடர்ந்து பாஜக, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட இந்து அமைப்புகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

Offer to go to Jerusalem .. Offer for Hajj pilgrimage .. Are only Hindus ? Furious Arjun Sampath.

குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை எடுத்துவரும் வரும் ஒவ்வொரு அறிவிப்பையும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறது அதாவது, அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட மக்கள் மன்றத்தில் எதிர்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை பல்வேறு மாநிலங்களில் குறைக்கப்பட்டு நிலையில், தமிழக அரசும் அதை குறைக்க வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை, அதனை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.  திமுக தொடர்ந்து வாக்கு வங்கிக்காக கிறித்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது என்றும் ஆனால் இந்து மக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

Offer to go to Jerusalem .. Offer for Hajj pilgrimage .. Are only Hindus ? Furious Arjun Sampath.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசை அதன் கூட்டணி கட்சிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஸ்டாலினை தவறாக வழிநடத்திவருகிறது. உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் நல்லது நடக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் எந்த நல்லதும் நடந்து விடக்கூடாது என்தபதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது. தமிழர்கள் தங்களது குடும்பத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நேற்றுவரை அதானி பன்னாட்டு முதலாளி, மோடியின் பினாமி என்று கூறிக்கொண்டு இருந்தார்கள், ஆனால் நேற்று அதானி உடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். திமுக என்ற கட்சியை கம்யூனிஸ்டுகள் தேச விரோதிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து எஸ்டிபிஐ, லயோலா கல்லூரி போன்ற தீயசக்திகளிடமிருந்து ஸ்டாலின் விடுபட வேண்டும். ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் ஜெயரஞ்சன், சுப வீரபாண்டியன் போன்றவர்கள் அவரை தவறாக வழி நடத்துகின்றனர்.

Offer to go to Jerusalem .. Offer for Hajj pilgrimage .. Are only Hindus ? Furious Arjun Sampath.

ஜெருசலேம் செல்வதற்கு சலுகை, ஹஜ் யாத்திரை செல்வதற்கு சலுகைகளை இந்த அரசு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால் இந்துக்களை மட்டும் புறக்கணிக்கிறது. அவர்களுக்கு சலுகை இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா.? மாவட்டம் தோறும்  5000 ஐயப்ப பக்தர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அவர்களுக்கு சபரிமலை செல்லும் வழியில் டோல்கேட் இலவசம் என இந்து சமய அறநிலையல்த்துறை அறிவிப்ப வேண்டும்.  இதை அமைச்சர் சேகர்பாபுவுக்கு நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios