Asianet News TamilAsianet News Tamil

களத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்..!! மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..!!

புயல் கரையை கடந்துள்ள நிலையில் அது ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையாக உள்ளது. இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு  பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

OBS EPS Stalin landed on the field .. !!  AIADMK, DMK revolving around for the people .. !!
Author
Chennai, First Published Nov 26, 2020, 11:41 AM IST

புயல் கரையை கடந்துள்ள நிலையில் அது ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையாக உள்ளது. இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு  பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை காலை 8 மணி முதல் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

OBS EPS Stalin landed on the field .. !!  AIADMK, DMK revolving around for the people .. !!

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. மரங்கள் சாய்ந்து உள்ளதால் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் புயல் கரையை கடந்த மரக்காணம், கடலூர் போன்ற பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

OBS EPS Stalin landed on the field .. !!  AIADMK, DMK revolving around for the people .. !!

கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு கடலூர் விரைகிறார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் நேற்று மழை அடித்து கொட்டிய போதும் அதைப் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி கொளத்தூர், பெரம்பூர், திருவிக நகர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து  ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார் இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுயிகளில் மக்களே சந்தித்து வருகிறார். இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை 8 மணி முதல் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தரமணி, பிறகு வேளச்சேரியில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை பார்வையிடுவார். பின்னர் அம்பேத்கர் நகரில் உள்ள நிவாரணம் முகாமையும் அவர் பார்வையிடுவார் என கூறப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios