Asianet News TamilAsianet News Tamil

மனம் இரும்பாக இருந்தாலும் வலிக்கதான் செய்யுது.. ஒரு விஷயத்துக்குதான் அமைதியா இருக்கேன்.. ஜெயபிரதீப் உருக்கம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

O.Panneerselvam son vp Jayapradeep Statement
Author
Tamil Nadu, First Published Jul 15, 2022, 7:30 AM IST

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயபிரதீப் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரகாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து, கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

இதையும் படிங்க;- ஏட்டிக்கு போட்டி... ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ் அறிவிப்பு!!

O.Panneerselvam son vp Jayapradeep Statement

இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி  உத்தரவிட்டுள்ளார். அதில், ஓபிஎஸ் மகனான அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், இன்னொரு மகன் ஜெயபிரதீப், புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், அசோகன், ரமேஷ், வினுபாலன், சைதை MM பாபு,  SR அஞ்சு லட்சுமி, சென்னை புறநகர் மாவட்ட துணை செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;-ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ‘முரசொலி’.. கட்சியை விட்டு தூக்கி பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

O.Panneerselvam son vp Jayapradeep Statement

இதற்கு போட்டியாக கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான செயல்பட்டதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 22 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, கோகுல இந்திரா, பா.வளர்மதி, ஜக்கையன், விருகை என்.ரவி, ஓ.எஸ்.மணியன், ஆதி ராஜாராம் ஆனியோர் நீக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

O.Panneerselvam son vp Jayapradeep Statement

அதில், அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும், யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து, யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும்போது என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது.

 

 

2001ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன். எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு, தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்! என ஜெயபிரதீப் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios