பெரிய தூண்டில் போட்ட ஓபிஎஸ்.. குஜராத் டூர் சக்சஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அந்த’ போட்டோ !
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வரும் சூழலில் கட்சியை யார் கைப்பற்றுவது எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா ? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரிந்துள்ளன. சென்னை வானகத்தில் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனி அணிகளாக அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு மேலும் கட்சியை வலுவிழக்கச் செய்யும் என்ற கருத்தும் வைக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர்தான்.
இதையும் படிங்க.. குழந்தைகளின் மெய்சிலிர்க்க வைத்த பாரதியார் நாடகம்.. நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !!
அவரின் பதவிக்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. பொதுக்குழு முடிவிற்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்முறையாக டெல்லி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து உள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
குஜராத் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி அமித் ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார் ஓபிஎஸ் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியது. பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் தனக்கு அதிமுகவில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் குறித்து புகார் அளிப்பார் என்றும், பாஜக தலைமையின் ஆதரவை கேட்டு பெறுவார் என்றும் கூறினார்கள். அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
இந்த நிலையில் குஜராத்தில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டது எடப்பாடி பழனிசாமி தரப்பில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. குஜராத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி உறுதி செய்துள்ளது.உடன் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !