நாளை குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழா... விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்படுவதாக தகவல்!!
நாளை நடைபெற உள்ள குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை நடைபெற உள்ள குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு அன்மையில் நடந்து முடிந்த தேர்தலில், 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. கடந்த 1995 முதல் தற்போது வரை 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்து வருகிறது. தற்போதைய வெற்றி மூலம் ஏழாவது முறையாக குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி
தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என தேர்தலுக்கு முன் பாஜக தலைமை அறிவித்தது. அதன்படி, நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரிந்து தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக அரசின் செயல்பாட்டில் கேளாறு உள்ளது... அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!
மேலும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அன்மையில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் தற்போது குஜராத்தில் நாளை நடைபெற உள்ள குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொள்கிறார். மேலும் இதற்காக இன்று மாலை அவர் குஜராத் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.